நேற்றைய தினம் 60 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்!

சிறிலங்காவில் முதல்தடவையாக 60 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நேற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டன. 43 ஆண்களும் 24 பெண்களும் அடங்கலாக நேற்று 67 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

கொழும்பு – 15, வத்தளை, வெல்லம்பிட்டி, அவிசாவளை, நீர்கொழும்பு, வாழைச்சேனை, கொழும்பு 14, கொட்டாஞ்சேனை, துலங்கடவல, மீகம, வெலிசறை, பண்டாரகம, காலி, பூஜாபிட்டிய, கம்பளை, அம்பேபுஸ்ஸ, தெனியதய, பொகவந்தலாவ, பரகடுவ, தெடிகமுவ, வெல்லவாய, ஹெம்மாத்தகம, கனேமுல்லை, கோனவல, ஏக்கல, பரந்தன், கரந்தெனிய, மொறட்டுவை, வாதுவ, மடபாத்த, அலுபொமுல்ல, பிலியந்தலை, மாத்தளை, ஏறாவூர், வத்தேகம, பலாங்கொடை, களனி, ஹோமாகம, கட்டுனேரிய, கம்பஹா, புசல்லாவை, வெலம்பட, கெங்கல்ல, கட்டுகஸ்தோட்டை, கண்டி, கொழும்பு – 07, நுவரெலியா, கலகெதர, களுத்துறை, கொழும்பு – 10, அம்பாறை, மாத்தறை, மாரவில, களுத்துறை தெற்கு, தெஹிவளை மற்றும் கின்தோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 6 மரணங்கள் வீடுகளிலும் , 5 மரணங்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதும் , 56 மரணங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் போது பதிவாகியுள்ளன. அதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று வியாழக்கிழமை 2715 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 216 111 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் ஒரு இலட்சத்து 80 427 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 33 201 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.