மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வடக்கு கடலினுள் பேருந்துக்கள் இறக்கம்!

கடல்வாழ் உயிரின பல்வகைமையை விருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், பாவனையில் இருந்து கழித்துவிடப்பட்ட பேருந்துகளை வடக்கு கடலில் இறக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சாலைகளில் (டிப்போ) பாவனைக்கு உதாவது என கழித்து விடப்பட்ட பேருந்துகளின் வெளி உடல் பகுதி கடலுக்குள் இறக்கி விடப்பட்டுள்ளன.

அவற்றை கடலினுள் இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் என கூறப்படுகிறது.

இதற்காகவே வடக்கு கடலில் இன்றைய தினம் 40 பேருந்துக்கள் அவ்வாறு கடலில் இறக்கி விடப்பட்டுள்ளன.

Previous articleயாழில் இரண்டு வல்லரசுகளின் ஆதிக்கத்தால் பனிப்போர் ஏற்படும் அபாயம் – அனந்தி எச்சரிக்கை
Next articleபயணக்கட்டுப்பாடு 14 ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர் தொடரப்படுமா?