ஒரே நாளில் 6,148 கொவிட் உயிரிழப்புக்கள் − அதிவுயர் அச்சுறுத்தல் பட்டியில் இந்தியா

இந்தியாவில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொரோனா உயிரிழப்புக்கள் நேற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளன.

மேலும் இந்தியாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 6ஆயிரத்து 148 ற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்தோடு கடந்த காலங்களில் கொவிட் உயிரிழப்பு குறைவடைந்து வந்த நிலையில், நேற்று திடீரென 6000தை கடந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Advertisement

உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புக்களை அதிகம் எதிர்நோக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.