காலிமுகத்திடல் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது.

கொழும்புத் துறைமுக கடற்பரப்பில் அண்மையில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்குள்ளாகிய நிலையில் கடலில் மூழ்கியுள்ளது.

இவ்வாறு கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை பகுதியில் நேற்றையதினம் இவ்வாறு கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

​இந்நிலையில், கடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வரும் நிலையில் கடந்த நாட்களாக இதுவரை 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.​