யாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர், வாயில் வாளை வைத்து வீடியோ வெளியிட்டமை தொடர்பில் நேற்று முன்தினம், கோப்பாய் பொலிவாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த இளைஞர் ரிக்ரொக் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அந்த வீடியோ பொலிசாரின் கவனத்திற்கு சென்றதையடுத்து கைது செய்யப்பட்டார். வாள்வெட்டு குழு உறுப்பினராக இருக்கலாமென்ற சந்தேகத்திலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் , ஆலயத்தின் வாளொன்றையே வாயில் வைத்து ரிக்ரொக் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரும் பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலமளித்தார். தாம் ஆலயத்தை கழுவ வரும் இளைஞர்களிடம் வாளையும் கழுவும்படி வழங்கியதாகவும், அப்போது ஒரு இளைஞன் ரிக்கொக் வீடியோ பதிவு செய்திருக்கலாமென கூறினார்.

இதனையடுத்து இளைஞனிற்கு வாள்வெட்டு குழுவுடன் தொடர்பில்லையென்பது உறுதியானதும், பொலிஸார் அறிவுரை கூறி இளைஞரை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.