நான் கொரொனா தடுப்பூசி போடப்போவதில்லை – சஜித்

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை மீண்டும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நிராகரித்துள்ளார்.

தொற்றுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவர் தனது பாரியாருடன் கொழும்பு கங்காராமய விகாரைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி பெறும்வரை தாம் அதனை செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் சூளுரைத்தார்.