சட்டவிரோத மதுபான உற்பத்தியின் போது பரல் வெடித்து ஒருவர் பலி!

அம்பாறை சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

Advertisement

சம்பவதினமான நேற்று வயலுக்கு நீர் செல்லும் ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும் அவர்களுடன் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் அதிகாலை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கான பெரல் வெடித்து தீபரவியதையடுத்து சம்பவ இடத்தில் 56 வயதுடை தந்தை இறந்துள்ளார்.

இந்நிலையில் தந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில் படுகாயமடைந்த உறவினரான 26 வயதுடையவர் வீட்டில் தாயாருடன் தகராறு காரணமாக தீயிட்டதாக தெரிவித்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான் மேலதிக விசானைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.