பியர் அருந்தும் 04 வயது சிறுவன் , காணொளி வெளியிட்டவர் அல்லி சென்ற பொலிஸார்!

சமூக வலைத்தளத்தில் சிறுவன் பியர் அருந்தும் காணொளி வெளியான நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன், அந்த வீடியோவில் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Advertisement

அத்துடன், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் பிரதிபொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.