சஜித் பிரேமதாச தம்பதி குணமடைந்த்து வீடு திரும்பினர்!

கொரோனா தொற்றுக்குள்ளான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஆகியோர் குணமடைந்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் (11) அவர்கள் வீடு திரும்பினர்.

இவர்கள் கடந்த மே 23 ஆம் திகதியன்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இருவரும் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதையடுத்து கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதோடு மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களையும் பெற்றனர்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் தனது எதிர்கால முயற்சிகளுக்காக தமது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் இதன்போது மகா சங்கத்தினர் தெரிவித்தனர்.