சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்த விவகாரம்: சந்தேக நபர் பிணையில் விடுதலை

சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்து, அக்காட்சியை ஒளிப்பதிவு செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பேலியகொடை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொடை, நுகே வீதியை சேர்ந்த 25 வயதானவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.