ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கினால், பாடசாலைகளை திறக்கப்படுமா?

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு தாம் கோரிக்கை விடுத்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் அநுருத்த பாதெனிய தெரிவிக்கின்றார்.

மேலும் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நாடு முழுவதும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதமளவில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுமாக இருந்தால், அடுத்தடுத்த மாதங்களில் பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது