மன்னாரில் கடலில் தொலைந்த மீனவர் – 4 ஆம் நாள் கரையொதுங்கி மீட்பு

கற்பிட்டி மீனவர் ஒருவர்(ரூபன் கொஸ்தா) மீன் பிடிக்க சென்ற வேளை கடும் காற்றினால் படகில் இருந்து கடலில் தவறி விழுந்துள்ளார்..

மீனவர்களினால் தொடர்ந்து மூன்று நாளாக தேடியும் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க முடியாது திணறினர்.

நான்காம் நாளான நேற்று (11.06.2021) தலைமன்னார் தெற்கு கடற்பரப்பில் உயிருடன் கரை ஒதுங்கியுள்ளார்.
அப்பகுதியில் காணப்படும் Vayu resort கு அண்மையாக கரையொதுங்கிய மீனவர் அங்கு இருந்த ஊழியர்களிடம் தன்னை காப்பாற்ற வேண்டி கெஞ்சியவாறு மயக்க நிலையை அடைந்துள்ளார்.

பின் முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து ,உணவு அளித்து தலைமன்னார் வைத்தியசாலை நிர்வாக சங்கக் உறுப்பினர்களுக்கு அறிவிக்கவே அவர்கள்
குறித்த மீனவரை அழைத்துச்சென்று வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்..உயிருடன் இருக்கும் செய்தி அறிந்து குடும்மபத்தினர் மிகவும் மகிழ்ச்சியுடன் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்…..