நேற்றைய தினம் 62 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் 62 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த மே மாதம் 8 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 31 ஆம் திகதி வரை 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஜூன் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை 55 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 62 பேரில் 27 பெண்களும் 35 ஆண்களும் அடங்குகின்றனர்.