நாட்டில் சைனோபாம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மீண்டும் கொரோனா; வெளியான பகீர் தகவல்!

சைனோபாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதன் பின்னரும், நோய் அறிகுறிகள் காணப்பட்ட சிலர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி அறிகுறிகள் காணப்பட்ட, 22 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது காணப்படும் எந்தவொருகொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்திருந்தார்.

அத்துடன் , இரண்டு கொரோனாதடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் வரை நோயெதிர்ப்பு சக்திகாணப்படும் என கருதப்படுவதாகவும் , குறித்த நோயெதிர்ப்புசக்தி ஒரு வருடத்துக்கு மேல் நீடிக்குமா இல்லையா என்பது குறித்து விஞ்ஞான ரீதியான பதிலொன்றுஇதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கொரோனா தடுப்பூசியைவருடத்துக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை பெற்றுக் கொள்ள வேண்டியநிலை ஏற்படுமா என்பது குறித்து உறுதி கூற முடியாது எனவும், பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.