யாழில் பணி முடிந்து வீடு திரும்பிய அரச உத்தியோகத்தரை வழிமறித்து கொள்ளை கும்பல் வழிப்பறி!

யாழில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த போது, கடமை முடிந்து வீடு திரும்பிய அரச உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் வழிப்பறி திருடர்களால் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இராச வீதி, கரந்தன் சந்தி பகுதியில் நடந்தது.

குறித்த உத்தியோகத்தர் கடமை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் தனித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் ஆள்நடமாட்டமற்ற அந்த பகுதியில் அவரை வழிமறித்த திருடர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்களின் திடீர் தாக்குதலை எதிர்பாராத அரச உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பியோடிய நிலையில் கொள்ளையர்கள் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.