கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,633 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,633 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 220,556 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 186,516 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல், நாட்டில் இதுவரையில் 2,073 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleசமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலை தொடர்பில் வெளியான செய்தி!
Next articleசமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய விசேட குழு