முல்லை. சாலைப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு சாலை பற்றைக்காட்டுப்பகுதியில் 15 மோட்டார் குண்டுகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சாலைப்குதியில் போரின் போது கைவிடப்பட்ட 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 14, 81மில்லிமீற்றர் மோட்டார்குண்டு 1 அதற்குரிய வூஸ்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Previous articleசமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய விசேட குழு
Next articleவவுனியாவில் பொதி செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி!