யாழ் ஓட்டமாவடியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு!

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி ஏற்றும் பணிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளதாவது, “கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுங்கள்.

குறித்த தடுப்பூசி தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தடுப்பூசி நிலையத்திலுள்ள வைத்தியரை அல்லது பொது சுகாதார பரிசோதகரை சந்தித்து அது தொடர்பான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.