பொலன்னறுவையில் 11 கோடி கொடுத்து ’ஹெலிகாப்டர்’ வாங்கிய அரிசிஆலை உரிமையாளர்!

பொலன்னறுவையில் உள்ள பிரதான அரிசியாலை உரிமையாளரும் தொழிலதிபருமான ஒருவர் ஹெலிகாப்டர் ஒன்றை 11 கோடி ரூபாவில் கொள்வனவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிங்குரக்கொட விமானப் படையின் ஓடுதளத்தில் தற்போது அந்த ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த ஹெலிகாப்டர் திருமண நிகழ்வு, உல்லாச சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது என்றும் தெரியவருகிறது.