சீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பில் 11பேர் பலி!

சீன மாகாணமான ஹூபேயில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு மத்திய தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு (சனிக்கிழமை 22:30 GMT) ஷியான் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகப் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அனர்த்தத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளமையினால் உயிரழப்புகள் உயர்வடையக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.