மரக்கிளை முறிந்து வீழ்ந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன்- ஹோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் காசல்றீ பிரதேசத்தில் உள்ள பஸ்தரிப்பிடத்தில் மழைக்காக ஒதுங்கியிருந்த மூன்று இளைஞர்கள் மீது, பாரிய மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில், குறித்த மூவரும் படுங்காயமடைந்துள்ளனர்.

நேற்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த மூவரும் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.