இலங்கையில் ழுழுவதும் களமிறக்கப்பட்டுள்ள சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பாகும்.

பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பலரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், எனினும் ஒருசிலரது நடவடிக்கை வருந்தத்தக்கதாகவும் உள்ளது.

அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். நாட்டை மீண்டும் திறக்கும் முடிவு மக்களின் செயற்பாடுகளால் மாற்றப்பட்டது.

மக்கள் சரியான முறையில் செயற்பட்டால், நாட்டை உரிய திகதியில் திறக்க முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleமரக்கிளை முறிந்து வீழ்ந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleஜூலை 2 வரை பயணத் தடையை நீடிக்க சுகாதாரதுறையின் உயர்மட்டம் அரசாங்கத்திடம் பரிந்துரை!