யாழில். நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் 55 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென காற்றுடன் கூடிய மழை காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது.

இதன் தாக்கத்தினால் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் கடும் காற்று மழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சகல பிரதேச செயலகங்கள் ஊடாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.