சீனாவால் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா!

வூகான்: வௌவால்களில் புதிய வகை கொரோனா வைரஸ்களை சீன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செல் (CELL) எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டிருக்கும் சீனாவின் ஷான்டாங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியலாளர்களின் ஆய்வறிக்கை வாயிலாக இது தெரியவந்துள்ளது.

வூகான் மாகாணத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் இருந்த வௌவால்களிடம் இருந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தியதில் 24 வகையான கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றில் ஒன்று தற்போது உலக பெருந்தொற்றாக கொரோனா மாறுவதற்கு காரணமாக இருந்து SARS-COV-2 வகையை ஒத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் வூகான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட நிலையில் அந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டறியும் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

தற்போது வௌவால்களிடம் இத்தகைய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி இருக்குமா என்ற கோணத்திலும் ஆய்வுகள் தொடங்கி உள்ளன.

Previous articleயாழில் பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனா!
Next articleமட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்பு!