மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்பு!

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடி கித்துல் காட்டுப் பகுதியிலேயே குறித்த யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே கித்துல் காட்டுப் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.