முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்காய் பறிக்க ஏறியவர் பரிதாப மரணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு இருட்டு மடு கிராமத்தில் மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதில் வெள்ளையன் சண்முகநாதன் என்ற 51 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இவரது உடல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இவருடைய உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு இன்று இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது.

Previous articleஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த 4 இந்திய பெண்கள் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை
Next articleகொரோனா தொடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு விசேட பரிசு தொகை!