எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தற்போதய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்!

தற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, ‘மக்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் அரசாங்கம் தற்போது பிரயோகித்து வருகின்றது.

அரசாங்கம் மக்களின் நலன்களில் அக்கறை காட்டாமல், குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தும் விடயத்துக்கே அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது.

இந்த அரசாங்கம் எதிர்காலத்திலும் சிறந்த முறையில் செயற்படாவிட்டால், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தை ஏனைய எதிர்கட்சிகளுடன் இணைந்து நாங்கள் முன்னெடுப்போம்.

ஆகவே அரசாங்கம், கடும் போக்கையும் அடக்குமுறையை குடும்ப ஆட்சியையும் கைவிட்டு செயற்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleஎரிபொருள் விலை உயர்வு என்பது அரசு எடுத்த முடிவு!
Next articleவடமராட்சி கிழக்கு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமைக்காக 29பேர் கைது