சற்றுமுன் யாழ் பருத்தித்துறை பொலிஸார் நால்வருக்கு கொரோனா!

யாழ். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை (11) முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு நேற்றைய தினம் (13) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

அதனை அடுத்து இன்றைய தினம் (14) பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் அருகில் வர்த்தக நிலையம் நடத்துபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தேநீர் சாலை ஒன்றினை நடத்தி வருபவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.