ஜூன் 15 முதல் டாஸ்மாக் கடை திறப்பு

ஜூன் 15 முதல் டாஸ்மாக் கடை திறப்பு என்கிற அறிவிப்பு பெண்களுக்கு அதிர்ச்சியையும் காபி, டீ கடைக்காரர்களுக்கு அதிருப்தி, ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக மே மாதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2000, மளிகைப் பொருட்கள் வழங்கி மக்களின் அபிமானத்தை பெற்றார்.

மேலும் அடுத்த மாதமும் வழங்கப்படுமென்றதும் பெண்கள் சந்தோஷப்பட்டனர். அந்த சந்தோஷத்திற்கு முதல்வர் ஸ்டாலினே டாஸ்மாக் கடைகளின் வடிவில் வேட்டு வைத்துள்ளார். மேலும் இந்த மாதத்திற்கான ரூ.2 ஆயிரம் தருவதற்கு டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 15 முதல் பணம், மளிகைப்பொருட்கள் வழங்கப்படுமென அறிவித்துள்ளது.

மேலும் அதேநாளில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் காலை 10:00 மாலை 5:00 திறக்கப்படுமென அறிவித்து பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் காபி, டீ வர்த்தகர்களிடம் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலம் பரவாத கொரோனா வைரஸ் காபி, டீ கடைகள் மூலமாகவா பரவி விடும் என கேள்வி எழுப்புகின்றனர்