இந்தியாவில் மீண்டும் ஒரேநாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் 7வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

நேற்று 80,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில், மேலும் 3,303 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 72 நாட்களில் இல்லாத குறைந்த அளவாக புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 3,921 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,74,305 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 62 ஆயிரத்து 947 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 9,73,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 48 லட்சத்து 49 ஆயிரத்து 301 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகோழி முட்டை போன்று கஞ்சா கடத்திய காவாலி சிக்கினார்!
Next articleபயணத்தடை மேலும் சிறிது காலம் நீடிக்கப்படுவதற்கே வாய்ப்புக்கள் அதிமுகமாக உள்ளது!