பயணத்தடை மேலும் சிறிது காலம் நீடிக்கப்படுவதற்கே வாய்ப்புக்கள் அதிமுகமாக உள்ளது!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை மேலும் சிறிது காலத்திற்கு நீடிக்கும் வாய்புகள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணக்கட்டுப்பாடுகளை தொடர்வதா? இல்லையா?

என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்களும் நோயாளர்களின் எண்ணிக்கையும்

குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும் குறித்த எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தினமும் இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும்

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

Previous articleஇந்தியாவில் மீண்டும் ஒரேநாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை!
Next articleபேசிக்கொண்டிருக்கும் போதே மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்!