யாழ் குருநகர் பகுதியில் அனுமதிக்கு மேலதிகமாக கலந்து கொண்ட பலர் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்றைய தினம் குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதாக அவதானித்து யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர்.

இதேவேளை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அதற்கு மேலதிகமாக அங்கு பலரும் ஒன்று கூடியதால் தனிமைப்படுத்தியதாக யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.

Previous articleபேசிக்கொண்டிருக்கும் போதே மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்!
Next articleஉடனைடியாக பயணத்தடையை நீக்குங்கள் ஏ-9 வீதி நடுவேசத்தியாக்கிரகத்தில் இறங்கிய பிக்கு!