எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது!

கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில் தீவிபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கப்பலின் தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து வௌியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் கடலுயிர்கள் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 31 இற்கும் அதிகமான கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள அதேவேளை 05 டொல்பின்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளன.