நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியூடாக தொடர்பினை எற்படுத்திய மர்மநபர், விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த மர்ம நபரின் தொலைப்பேசி உரையாடலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டப்போது, புரளி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் தொலைபேசியின் ஊடாக தொடர்பினை ஏற்படுத்திய சந்தேகநபர் யார் என்பதை கண்டறிவது தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு முன்னரும் நடிகர்களான ரஜினிநாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஎக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது!
Next articleடாஸ் மாக்கில் குவிந்த குடிமகன்கள்; ஒலிபெருக்கியில் அறிவுறுத்தல்கள் வழங்கி மது விற்பனை