இன்றைய தினமும் வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 361 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 32 ஆயிரத்து 955 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Previous articleமீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்!
Next articleநாளை தொடக்கம் 10 நாட்களுக்கு மின் துண்டிப்பு!