நயினாதீவில் கரை ஒதுங்கும் மருத்துவக் கழிவுகளால் பரபரப்பு!

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

அவை இந்தியக் கடலில் அழிக்கப்பட்டு வந்தவையா என்ற குழப்ப நிலை காணப்படுகிறது.

வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறிப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடமை நிமிர்த்தம் அவர் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் நாளைய தினம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Previous articleமட்டக்களப்பில் நீரில் மூழ்கி பலியான இளைஞர்கள்!
Next articleவடமாகாண உயர் அதிகாரிக்கு அனுப்பிய சாவகச்சோி பலாப்பழம்!