யாழ்.ஏழாலையில் எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்.ஏழாலை பகுதியில் குப்பைக்கு தீ மூட்டியபோது தீக்குள் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் குப்பிளான் தெற்கை சேர்ந்த திருமதி அ.சுதாகினி (வயது43) என்பரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று அதிகாலை வேளை வீட்டில் உள்ளோர் நித்திரையால் எழுவதற்கு எழுந்து வீட்டு காணியினை கூட்டி குப்பைகளுக்கு தீ வைத்துள்ளார்.

அந்த தீயில் முக குப்புற விழுந்து கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

காலை கணவன் எழுந்து மனைவியை தேடிய போதே எரிந்த குப்பைகளுடன் மனைவியின் சடலம் காணப்பட்டதனை அவதானித்து சுன்னாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்த்துடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதன வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

குறித்த பெண் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் காலை குப்பை மூட்டிய பின்னர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக எரிந்துகொண்டிருந்த குப்பைக்கு மேல் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Previous articleவடமாகாண உயர் அதிகாரிக்கு அனுப்பிய சாவகச்சோி பலாப்பழம்!
Next articleகாரைதீவில் இடம்பெற்ற முதலாவது கொரோனா மரணம்!