காரைதீவில் இடம்பெற்ற முதலாவது கொரோனா மரணம்!

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது மரணம் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை சம்பவித்துள்ளது.

காரைதீவு.4 ஜச் சேர்ந்த விநாயகமூர்த்தி சத்தியசீலன் என்பவரே இவ்விதம் கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய குடும்பஸ்தரான இவர் கடந்த 4 ஆம் திகதி மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை நிமித்தம் சென்ற போது மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையின் போது தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து கரடியனாறு கொவிட் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு இருந்தவேளை நேற்று முன்தினம் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காரைதீவு பிரதேச சபை ஊழியர் விநாயகமூர்த்தி சுரேந்திரன் கடந்த (10) அதிகாலை 2.00 மணியளவில் கொரோனாவின் கொடும் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவர் காரைதீவில் பிறந்து அட்டப்பள்ளத்தில் திருமணம் செய்து அங்கு வாழ்ந்துவந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.