நேற்றைய தினம் 57 கொரோனா இறப்புகள்!

சிறிலங்காவில் நேற்று 13 ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,260 பேராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.