யாழில் சிக்கிய போலி பொலிஸ் உத்தியோகஸ்த்தர்!

யாழ்ப்பாணத்தில் போலி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியதுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும் காண்பித்து நமாடியுள்ளார்.

இதனையடுத்து கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸார் குறித்த நபரை நேற்று கைதுசெய்துள்ளனர். சம்பவத்தில் அச்செழு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Previous articleஅழகு நிலையத்திற்குள் நுழைந்து பெண்ணின் ஒருவரின் தலைமுடியை வெட்டி எடுத்த 3 பெண்கள்!
Next articleகளுவாஞ்சிகுடியில் விபத்து-19 வயது இளைஞன் படுகாயம்!