களுவாஞ்சிகுடியில் விபத்து-19 வயது இளைஞன் படுகாயம்!

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில், மருதமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய அப்துல் ஹமீட் றாசிக் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் நேற்று (14) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஒன்று வீதியில் குறுக்கீடு செய்ய முற்பட்டபோது, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleயாழில் சிக்கிய போலி பொலிஸ் உத்தியோகஸ்த்தர்!
Next articleகோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு