கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையிலுள்ள முன்னணி கோதுமை மா விற்பனை நிறுவனமாகிய பிரீமா தனது உற்பத்திக் கலவையில் ஒன்றாகிய மில்க் பிரேண்ட் என்ற மா விலையை 3 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளது.

இன்று தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலில் உள்ளதாக அந்த நிறுவனம் கூறுகின்றது.

அதனடிப்படையில் 50 கிலோ பிரீமா மில்க் பிரேண்ட் மாப் பொதியின் விலை 4175 ரூபாவாகும்.

இதேவேளை ரொட்டி செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

மில்க் பிரேண்ட் என்ற மாப் பொதி அதிகமாக பேக்கரி நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகளுவாஞ்சிகுடியில் விபத்து-19 வயது இளைஞன் படுகாயம்!
Next articleபத்திரிகையாளர் முன்பு பச்சையாக மீனை உண்ட பேலியகொட விற்பனையாளர்கள்!