கொரோனாவினால் மரணித்த 605 பேரின் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த, 605 பேரின் சரீரங்கள், இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் அசேல குணவர்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் குறித்த சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

572 முஸ்லிம்களின் சரீரங்களும், 14 கிறிஸ்தவர்களின் சரீரங்களும், 12 இந்துக்களின் சரீரங்களும், 7 பௌத்தர்களின் சரீரங்களும் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.