ஆஸ்திரேலியாவின் ஒரே நபரை கரம் பிடிக்கும் இரட்டை சகோதரிகள்!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் அனா(Anna) மற்றும் லூசி(Lucy), இருவரும் ஒரே இளைஞரை திருமணம் செய்யவுள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டுட்டு வருகின்றது.

இரட்டை சகோதரிகள் அனா மற்றும் லூசி அந்நாட்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் பென்( Ben Byrne) இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரபோஸ் செய்தார். 37 வயதான பென் இந்த நிகழ்ச்சியில் முதலில் அனா மற்றம் லூசியை ஆஸ்திரேலயாவில் உள்ள ஒரு பிரபலமான பார்க்கிற்கு அழைத்து செல்கிறார். அங்கு ஒரு மரத்தடியில் அமர வைக்கிறார்.

அங்கு அவர்களுக்கான கேண்டில் லைட் சிட்டிங் ஏற்பாட செய்யப்பட்டிருந்தது. அப்பொது பென் தனது பாக்கெட்டிலிருந்து 3 மோதிரம் கொண்ட நகையை பெட்டியை எடுத்து திறந்து அவர்கள் முன் நீட்டி “அனா, நீ எனக்கு இந்த உலகிலேயே மிக முக்கியமானவள், நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். லூசி நீ எனக்கு இந்த உலகின் மிக முக்கியமானவள், நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். நான் உங்களுக்கு மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் செய்வேன். இந்த மோதிரம் நமது இணைப்பிற்கு சாட்சியாக இருக்குமா?” எனக் கேட்டிருந்தார்.

அதற்கு இருவரும்” நாங்களும் உன்னை காதலிக்கிறோம். இந்த உலகிலேயே அதிர்ஷ்டம் பெற்ற இரட்டையர்கள் நாங்கள். எங்களுக்கு பிடித்தவரை எங்களுக்குள் ஷேர் செய்யவிருக்கிறோம்” என கூறினர்.

இது குறித்து பென் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டு ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்வது சட்ட விரோதம். ஆனால் வெளிநாடுகளில் சாத்தியம். மலேசியா, இந்தோனேஷியா, அமெரிக்காவின் சில பகுதிகளில் இதற்காக சட்டம் உள்ளது. அங்கு சென்று திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம் என கூறினார்.

இதேவேளை இவர்கள் மூவரும் கடந்த 2012ம் ஆண்டு முதலே டேட்டிங் செய்து வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியில் சென்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்