ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய பதவிக்கு தமிழ் பெண் நியமனம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார். 15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம் பெறுவதற்கு முன்னர் பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார்.

இந்நிலையில் திருமதி. மேனகா மூக்காண்டி பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

Previous articleசுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்து!
Next articleமுல்லைத்தீவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 64 வயதுடைய முதியவர் படுகாயம்!