முல்லைத்தீவில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகள் தயாரித்த பாரிய வெடிபொருள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி மீனவர்கள் கரைவலைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் மீனவர்களின் வலையில் சிக்குண்டு குறித்த வெடிபொருள் கரைக்கு வந்துள்ளது, இவ்வாறு கரைக்கு வந்த பொருள் வெடிபொருள் என மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டு சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு மீனவர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது

இந் நிலையில் குறித்த வெடிபொருளை அகற்றுவது தொடர்பில முல்லைத்தீவு பொலிசார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்

கடந்த கால போரின் போது, இந்த வெடிபொருள் கடலில் போடப் பட்ட நிலையில், தற்போது வலையில் சிக்கி கரை ஒதுங்கியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த வெடிபொருள் விடுதலைப்புலிகள் தங்களுடைய போர்கப்பல்களில் பொருத்துவதற்காக தயாரித்ததாக இருக்கலாமா என தெரிவிக்கப்படுகிறது

Previous articleமுல்லைத்தீவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 64 வயதுடைய முதியவர் படுகாயம்!
Next articleயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு!