யாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் இதுவரை 93 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த தாக்கத்தினால் 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 4 சிறு தொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement