யாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன?

யாழ் மாவட்ட மக்களின் சில செயற்பாடுகளிலேயே யாழில் தொற்று அதிகரித்ததாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி உற்சவங்கள் திருவிழாக்கள் நடாத்தப்பட்டமை யாலேயே தொற்று நிலைமை அதிகரித்தது.

Advertisement

தற்போதும் சில இடங்களில் திருமண நிகழ்வுகள் வீடுகளில் சுகாதார பிரிவின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த பயணத்தடை என்பது மக்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே எனவே பொதுமக்கள் இந்த பயணத்தடை காலத்திலாவது சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாடுகளுடன் வீடுகளில் இருப்பது மிகவும் சிறந்ததாகும் .என்றார்.

இன்றைய தினம் இந்த சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்திருக்கின்றோம் அதாவது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மாகாண பணிப்பாளர் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரிவினர் மற்றும் நமது ராணுவத்தினர் முயற்சியின் பயனாக இன்றையதினம் இந்தப் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்த சிகிச்சை நிலையத்தில் 200 கட்டில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்படுவோரை பராமரிப்பதற்காக சிகிச்சை நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எனவே பொதுமக்கள் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை ஒழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்