மட்டக்களப்பில் 7 வயது சிறுமிக்கு இரு சிறுவர்களால் நேரவிருந்த கொடூரம்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ள முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை, குறித்த வீட்டின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இரு சிறுவர்களையும் பொலிசார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous articleஇலங்கையில் டெல்டா கொவிட் பரவல்?
Next articleயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா!