யாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்களில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் 41 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் இனம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 486 பேருக்கும் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 144 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் இவர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.